உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்த மாநிலம் என்ற பெருமையை 3-வது ஆண்டாக தமிழ்நாடு தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மெரினா கடற்கரை, உலகப் புகழ்பெற்ற கோயில்கள், குளிர் பிரதேசங்கள் என்று தமிழகத்தில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதனால் தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இந்த நிலையில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்த மாநிலம் என்ற பெருமையை 3-வது ஆண்டாக தமிழ்நாடு தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழகத்துக்கு அடுத்த இடத்தை உத்தர பிரதேசமும், 3-வது இடத்தை மத்திய பிரதேசமும் பிடித்துள்ளன.
No comments:
Post a Comment