பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புப் பெற வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவில் வரும் பெண்களுக்கும் ஆதார் எண் அவசியமாகிறது.
3 ஆண்டுகளில் 5 கோடி ஏழை பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்பு வழங்குவதற்கான பிரதமரின் உஜ்வாலா யோஜனா கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “இத்திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்புப் பெற விரும்பும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு ஆதார் எண் அவசியமாகிறது. எனவே ஆதார் எண் இல்லாதவர்கள் மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்த பெண்கள் தங்கள் விண்ணப்பக் கோரிக்கையின் அடையாளச் சீட்டைக் காண்பித்து இலவச எல்.பி.ஜி. இணைப்பைப் பெறலாம்.
இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறுவோர் விண்ணப்பத்துடன் புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பான் எண்., அல்லது ஓட்டுநர் உரிமம், கிசான் புகைப்பட பாஸ்புக், அல்லது கெசட்டட் ஆபீசர் ஒருவர் கையெழுத்திட்ட விண்ணப்பதாரரின் புகைப்படம் அடங்கிய ஆவணம் என்று இவற்றில் ஏதோ ஒன்றை இணைக்க வேண்டும்.
ஒருவரது அடையாளத்தை நிரூபிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவணங்களைக் காண்பிப்பதற்குப் பதிலாக ஆதார் எண் ஒரே அடையாள ஆவணமாக இருக்கும் என்று அரசு அறிவிக்கை கூறியுள்ளது.
No comments:
Post a Comment