பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.நாள்:10.03.2017 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 7, 2017

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.நாள்:10.03.2017

அன்புடையீர் வணக்கம்!


அனைத்து பகுதி நேர ஆசிரியர்களும் 10.03.2017 அன்று காலை:9 மணிக்கு சென்னைவள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதம் மற்றும் 
தொடர் போராட்டத்திற்க்கு ஆயத்தமாக கொத்தடிமை வாழ்க்கைக்கு முடிவு கட்ட மூன்று நாட்களுக்கு தேவையான உடை,பெட்சீட் அத்தியவசிய பொருட்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள் மருந்து,மாத்திரைகள் எடுத்து வரவும்.அனைவரும் தவறாமல் ஒற்றுமையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இது நமது வாழ்வாதார பிரச்சனை. நமக்காக நாம் தான் களத்தில் இறங்கிபோராடவேண்டும், நமக்கும் சேர்த்து அடுத்தவர்கள் போராடுவார்கள் நாம்வீட்டில்இருக்கலாம் என்று நினைத்ததன் விளைவு இன்னும் நாம் பள்ளியில் அடிமையாக இருக்ககாரணம் என்பதை உணர்ந்து அரசுக்கு நெருக்கடி கொடுத்து சாதிக்க இதுவேசரியானதருணம் இது தான் என்பதை உணர்ந்து அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நம்வாழ்வாதார கோரிக்கையை வென்றெடுக்க புறப்படுவோம்.
ஒற்றுமையே நமது பலம்.அனைவரும்வாருங்கள் நாம் நம் பணி நிரந்தரத்தை வெல்வோம்.
குறிப்பு: தேர்வு சமயம் என்பதால் பள்ளி நடத்துவது மற்றும்தலைமையாசிரியர் குறித்த கவலை நமக்குவேண்டாம்.
போராட்ட நாட்களில் நாம் யாரும் பள்ளிக்கு செல்லக்கூடாது. தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் தகவல் தெரிவிக்கவும்.
-மாவட்டபோராட்டக் குழு
தமிழ்நாடு



No comments:

Post a Comment