சொர்க்கமாக இருந்த பூமி கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகிக் கொண்டிருக்கிறது....!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 5, 2018

சொர்க்கமாக இருந்த பூமி கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகிக் கொண்டிருக்கிறது....!!

சொர்க்கமாக இருந்த பூமி கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகிக் கொண்டிருக்கிறது....!!
ஜீன் 5 இன்று உலக சுற்றுச்சூழல் தினம்... நம்மை தாங்கும் பூமிக்கு நாம் என்ன செய்தோம்?
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று நாம் சில உறுதிமொழிகளை எடுப்பது அவசியமானது.

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சொர்க்கமாக இருந்த பூமி கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் வேறு யாரும் அல்ல மனிதர்களாகிய நாம் தான்.

நாம் என்ன செய்தோம் என்று மட்டும் கேட்காதீர்கள். பூமியை பற்றி கவலை இல்லாமல் மரங்களை வெட்டி கட்டிடங்கள் கட்டுவது, வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து மண்டலம் மண்டலமாக புகையை வெளியேற்றி ஒசோன் படலத்தை கெடுப்பது என பல நல்ல காரியங்களை செய்து பூமியை அழித்துக் கொண்டிருக்கும் பெருமை மனிதர்களையே சேரும்.
போதாது
ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுச்சூழல் தினத்தன்று மட்டும் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பது, மரங்கள் நடுவது பற்றி பேசினால் போதாது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா அதனால் என்ன என்ற மெத்தனத்தை முதலில் நாம் கைவிட வேண்டும்.
உறுதிமொழி
இயற்கை வளங்களை அழித்துக் கொண்டிருக்கும் நாம் சுற்றுச்சூழல் தினமான இன்று 5 உறுதிமொழிகளை எடுப்போம். உறுதிமொழிகளை ஏற்பது மட்டும் போதாது அதை செயல்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
குப்பை
கண்ட இடத்தில் குப்பையை வீச மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அருகில் குப்பைத் தொட்டி இல்லாவிட்டால் பேப்பர்களை உங்கள் கைப்பையில் சிறிது நேரம் வைத்திருப்பதில் தவறு இல்லை.
பிளாஸ்டிக்
நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள் பூமியில் மக்காமல் கிடக்கும் தன்மை உடையன. அதனால் இனி பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்போம்.

மாசு
கார், பைக்குகளை அதிக அளவில் பயன்படுத்தி காற்றை மாசுபடுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்போம். அருகில் உள்ள இடங்களுக்கு கால்நடையாகவோ அல்லது சைக்கிளிலோ செல்வது நம் உடல் நலத்திற்கும், பூமிக்கும் நல்லது. தண்ணீரை வீணாக்குவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மரங்கள்
மரங்களை வெட்டிவிட்டு நிழல் தேடி அலையும் நாம் இனியாவது மரங்கள் நடுவோம். மரங்களை வெட்டுவதை முடிந்த அளவில் குறைத்துக் கொள்வோம். மரங்களின் எண்ணிக்கை குறைய குறைய மழையின் அளவும் குறையும் என்பதை நினைவில் கொள்க.
விலங்குகள், பறவைகள்
அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகளை அழிக்காமல் அவைகளின் மதிப்பை உணர்ந்து நடந்து கொள்வோம் என்று உலக சுற்றுச்சூழல் தினமான இன்று உறுதிமொழி எடுப்போம்.

No comments:

Post a Comment