விரைவில் ஆதார் பயன்பாட்டில் புதிய முறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 14, 2018

விரைவில் ஆதார் பயன்பாட்டில் புதிய முறை

ஆதார் அட்டையில் தற்போது கண்களின் கருவிழிப் படலம், விரல் கைரேகைகள் ஆகியவை முக்கிய அடையாளமாக ஏற்கப்பட்டுள்ளன. இதில் வயோதிகம், விபத்து, கடின உழைப்பு உள்ளிட்ட காரணிகளால் ஆதாரைப் பயன்படுத்துவதில் அவ்வப்போது சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் முகத்தையும் அடையாளமாக ஏற்கும் முறையை மத்திய அரசு பரிசீலித்து வந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூஷன் பாண்டே, முகப்பதிவு சார்ந்த அடையாள முறையானது ஏற்கனவே உள்ள வழிமுறைகளோடு கூடுதலாக ஒரு வழிமுறையை உருவாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் தேவையின் அடிப்படையில் மட்டும் ஒருவருக்கு முக அமைப்பும் அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக ஜூலை ஒன்றாம் தேதி முதல் முக அடையாள முறை நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்ட நிலையில் சிக்கலின்றி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த கூடுதலாக ஒருமாதம் அவகாசம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது வரை நாடு முழுவதும் 121 கோடியே 17 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் நாள்தோறும் சராசரியாக 4 கோடி ஆதார் அட்டைகள் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment