மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. நாளை நடைபெறும் தலைமையாசிரியர் கலந்தாய்வில் மனுதாரரையும் அனுமதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கலந்தாய்வில் பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் அவை நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் கலந்தாய்விற்கு தயார் செய்யப்பட்ட பதவி மூப்பு பட்டியலில் குளறுபடி இருப்பதாக ஜெயராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment