2006 புதிய ஊதிய விகிதத்தின்படி தொழில் வரி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 4, 2018

2006 புதிய ஊதிய விகிதத்தின்படி தொழில் வரி

2006 புதிய ஊதிய விகிதத்தின்படி தொழில் வரி பிடித்த அட்டவணையில் மாற்றங்கள் மேற்கொள்ளாமல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அதற்கு முந்தைய ஊதிய விகிதத்தின்படியே தொழில் வரி வசூலிக்கப்பட்டதால் அலுவலக உதவியாளர் முதல் முதல்வர் வரை அனைவருக்கும் தொழில்வரியின் உச்ச அளவு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசூலிக்கப்பட்டது.  தற்போது நீதிமன்ற வழக்கின் அடிப்படையில் 01.04.2018 முதல் ஊதியத்திற்கேற்றவாறு தொழில்வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. அதன்படி,
ஊதியம் ரூ.21000/- வரை – Nil
21001 – 30000 ---ரூ.135
30001 – 45000 ---ரூ.315
45001 – 60000 ---ரூ.690
60001 – 75000 ---ரூ.1025
75000க்கு மேல் --- ரூ.1250
சில உள்ளாட்சி அலுவலகங்களில் இதன்படியே நடப்பு அரையாண்டிற்கான தொழில்வரி வசூலிக்கப்பட்டடுள்ளதாக அறியப்படுகிறது.  ஆனால் மற்ற பல்வேறு அலுவலகங்களில் இன்னும் அரசாணை பெறப்படிவில்லை என்ற காரணம் கூறி அதிக தொகை வசூலிக்கப்படுகிறது. எனவே செப்டம்பர் மாத ஊதியப்பட்டியல் சமர்பிக்க இன்னும் ஒரு மாத கால அவகாசம் உள்ள நிலையில் சற்று பொறுத்திருந்து தொழில்வரி செலுத்தினால் அதிகபட்ச தொகை செலுத்துவதில் இருந்து பெரும்பாலான ஊழியர்கள் காக்கப்படலாம்.

No comments:

Post a Comment