5 தாலுக்கா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பரமக்குடியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்: 5 தாலுக்கா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் வருவதால் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பரமக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நாளை அவரது 61வது நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் அங்கு வருகை தரவுள்ளனர்.
எனவே பரமக்குடி முழுவதும் 75 கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment