தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்ப - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 17, 2018

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்ப

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனதேர்வு முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்படுகின்றன.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ராம.சீனுவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த மே மாதம் நடைபெற்ற தொலைதூரக்கல்வி நிறுவனத்தின் அனைத்து இளங்கலை பட்டப் படிப்புகள், எம்எல்ஐஎஸ், பிஎல் ஐஎஸ், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் 17-ம் தேதி (இன்று திங்கள்கிழமை) வெளியிடப்படுகின்றன.தேர்வு முடிவுகளை தொலை தூரக்கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ideunom.ac.in) மாலை 6 மணி முதல் அறிந்துகொள்ளலாம்.

விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய தகுதியுடையவர்களும், மறுகூட்டல் செய்ய விரும்புவோரும் செப்டம்பர் 18 முதல் 27 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். மறுமதிப்பீடு கட்டணம் ஒருதாளுக்கு ரூ.1000. மறுகூட்டல் கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.300 ஆகும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment