தமிழக வாகன ஓட்டிகளுக்கு வருகிறது ஒரே ஸ்மார்ட் கார்டு.!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 7, 2018

தமிழக வாகன ஓட்டிகளுக்கு வருகிறது ஒரே ஸ்மார்ட் கார்டு.!!

தமிழகத்தில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது வாகன ஓட்டிகள் வாகன உரிம‌ம், ஆர்.சி.புத்தகம்,  இன்சூரன்ஸ் என வாகன சம்மந்தமான அனைத்து தரவுகளையும் தனித்தனியான கோப்புகளாக வைத்துள்ளனர்.

இதில் வாகனத்தின் இன்சூரன்ஸ் வருடம் ஒருமுறை புதுப்பிக்கப்பட்ட வேண்டும். மேலும். சாலை வரி, வாகன தரக்கட்டுபாட்டு சான்று (Fitness Certificate F.C) உள்ளிட்டவையும் புதுப்பிக்கப்படவேண்டும்.
இவை அனைத்தும் தனி தனி ஆவணங்களாக இருந்துவந்த நிலையில், தமிழகத்தில் விரைவில், வாகன ஓட்டிகளுக்கு வசதியாக அனைத்து தகவல்களும், ஆவணங்களும் உள்ளடக்கிய ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட் கார்டில், வாகன உரிம‌ம், ஆர்.சி.புத்தகம் , இன்சூரன்ஸ் என அனைத்து தகவல்களும், ஆவணங்களும் இடம் பெறுகின்றன. ATM கார்டுகள் அளவில் இந்த ஸ்மார்ட் கார்டு வடிவமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கபட்டுள்ளதாகவும், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment