22.12.2018 உள்ளூர் விடுமுறை : மாவட்டஆட்சியர் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 13, 2018

22.12.2018 உள்ளூர் விடுமுறை : மாவட்டஆட்சியர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 22 ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி
மாவட்டஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு 22.12.2018 (சனிக்கிழமை) அன்று இயங்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
22.12.2018 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக 2018 ஜனவரி திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (12.01.2019) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி உள்ளூர் விடுமுறை துய்த்த மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
டிச 22ம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக்கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்மு.வடநேரே தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment