பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 25, 2018

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் சிறப்பு தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, ஏலக்காய் மற்றும் 2 கரும்பு துண்டு ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் நியாயவிலைக் கடைகள் மூலம் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளுக்கு முன்பே நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment