ஒடிசாவில் நாளை அறிவியல் மாநாடு தமிழக குட்டி விஞ்ஞானிகள் 30 பேர் பங்கேற்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 28, 2018

ஒடிசாவில் நாளை அறிவியல் மாநாடு தமிழக குட்டி விஞ்ஞானிகள் 30 பேர் பங்கேற்பு

ஒடிசாவில் நாளை அறிவியல் மாநாடு தமிழக குட்டி விஞ்ஞானிகள் 30 பேர் பங்கேற்பு
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில், குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நாளை துவங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது
. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த குழந்தை விஞ்ஞானிகள் கலந்துகொள்கின்றனர். தமிழகத்திலிருந்து மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 30 குழந்தை விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று மாலை 3.30 மணியளவில் திருச்சி ரயில்வே ஜங்ஷனிலிருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு புறப்பட்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், கல்வி ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் மோகனா ஆகியோர் மாணவர்களுடன் பயணம் செய்தனர்.

No comments:

Post a Comment