சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 25, 2018

சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி

சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை தோல்வியை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தொடக்க கல்வித்துறையில் கடந்த 2009ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஒரே தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய வேறுபாடு நீடிக்கிறது. அதை முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டு பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது முறையாக தமிழக அரசுடன் அதாவது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை இரண்டாவது முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. சம வேலை, சம ஊதியம் என்ற அடைப்படையில் அடுத்தக்கட்ட போராட்டத்தை மேற்கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமானோர் சென்னை வந்தனர். அன்று அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததின்படி சனிக்கிழமை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து அடுத்தக்கட்ட போராட்டத்தை திட்டமிட்டிருந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதலமைச்சரை சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருவதாக வாக்குறுதி அளித்ததின் பேரில் இன்று காலையில் இருந்து காத்திருந்தனர். மதியம் 3.30 மணியளவில் பேச்சுவார்த்தையானது தொடங்கியது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலாளர் பிரதீப் யாதவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பின்பாகவும் சுமூக தீர்வு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்திருக்கிறது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment