வருகைப்பதிவு, செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை கல்வித்துறை பட்டியலிடுகிறது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 21, 2018

வருகைப்பதிவு, செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை கல்வித்துறை பட்டியலிடுகிறது.

வருகைப்பதிவு, செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை கல்வித்துறை பட்டியலிடுகிறது.
ஆன்லைன்' பதிவை சோதிக்கும் 'நெட்வொர்க்!

கிராமப்புற பள்ளிகளில், 'நெட்வொர்க்', பிரச்னையால், மாணவர்களின் வருகையை, ஆன்லைனில் பதிவு செய்வது சிக்கலாகியுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 254 அரசு பள்ளிகள் உள்ளன.

அரசு பள்ளி மாணவர்களின் வருகையை, 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்யும் நடைமுறை செப்., மாதம் முதல் நடைமுறைப் படுத்தப்பட்டது.

வகுப்பு ஆசிரியர்கள், அவர்களது, 'ஆன்ட்ராய்ட்', மொபைல்போனில், வருகை பதிவு செயலியை பதிவிறக்கம் செய்து, அதில், மாணவர்கள் வருகையை பதிவிட வேண்டும்.

கிராமப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள், 'ஆன்ட்ராய்ட்' மொபைல்கள் வைத்திருந்தாலும், 'நெட்வொர்க்' பிரச்னையால், பலரும் சாதாரண 'மொபைல்போன்'களை பயன்படுத்துகின்றனர்.

தற்போது, கல்வித்துறை உத்தரவால், 'நெட்வொர்க்', இல்லாத பள்ளிகளில், 'ஆன்லைன்' வருகை பதிவுக்கு ஆசிரியர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

பள்ளிகள் அமைந்திருக்கும் கிராமங்களில், 'நெட்வொர்க்', இருக்கும் இடங்களுக்கு சென்று, செயலியில், வருகையை பதிவேற்றம் செய்கின்றனர்.

இப்பிரச்னை இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வேறு ஆலோசனையும் வழங்கப்பட்டது.

வீட்டில் 'ஆன்லைன்' செயலியை துவக்கிக்கொண்டு, பள்ளிக்கு வந்தவுடன் வருகை பதிவு செய்துகொள்ளலாம்.

மீண்டும் 'நெட்வொர்க்', உள்ள இடத்துக்கு செல்லும்போது வருகைப்பதிவை தானாக பதிவாகிவிடும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

ஆனால், பலரும் இதனை முயற்சி செய்தும், நேரம் மாறி காட்டுவதாகவும், சில நாட்களில், பதிவு ஆகாமல் போய்விடுவதாகவும் ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.தற்போது, கல்வித்துறை 'ஆன்லைன்' வருகைப் பதிவை தீவிரமாக கண்காணிக்கிறது.

இப்பிரச்னையால் வருகைப்பதிவு, இப்பதிவை செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை தொடர்ந்து கல்வித்துறை பட்டியலிடுகிறது.

இத்தகைய வருகை பதிவு செய்வதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணாமல் கல்வித்துறை பள்ளி நிர்வாகங்களை புகார் கூறுவதால், ஆசிரியர்கள் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்

No comments:

Post a Comment