அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 814 காலியிடங்களில்,
கணினி ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வியின், புதிய பாட திட்டத்தில், கணினி அறிவியல் படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிளஸ் 1 படிப்பில், தொழிற்கல்வி பாட பிரிவில், கணினி அறிவியல், கட்டாய பாடமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால், கணினி அறிவியல் படித்த ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, 2,896 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 814 கணினி அறிவியல் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில், புதிய ஆசிரியர்களை நியமிக்க, தமிழக பள்ளி கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
'மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிகமாக இந்த நியமனத்தை மேற்கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஒருவர் அடங்கிய குழு வாயிலாக, இந்த நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, புதிய ஆசிரியர் நியமிக்கப்படும் வரை, தற்காலிக ஆசிரியர்கள் பணியில் இருக்க முடியும். அதன்பின், அந்த இடத்திற்கு புதிதாக, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment