இந்தாண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் நிகழ்வு நாளை மறுநாள் 19ம் தேதி பெளர்ணமி அன்று இரவு 9.30 மணி அளவில் நிகழ உள்ளது. சாதாரண நாட்களை விட இந்த சூப்பர் மூன் நிகழ்வின் போது நிலவு மிகவும் பெரிதாகவும், அருகிலும் தோன்றும். இதனை வெறும் கண்களால் நாம் காண முடியும். இந்த நிகழ்வு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மிக சிறப்பாக தெரியும் என நாசா தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் சூப்பர் மூனை பார்க்க ஆவலாக உள்ளனர். இந்த சூப்பர் மூன் நிகழ்வு கடந்த 2011ம் ஆண்டு முதல் மிகவும் பிரபலமனாது. வரும் 19ம் தேதி மிக அருகில் தோன்றும் சூப்பர் மூன் பார்க்க தவறவிட்டால் அடுத்து 7 ஆண்டுகள் கழித்து 2026ல் தான் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment