கோக்கலூர் அரசுப் பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழா
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோக்கலூர் அரசுப் பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைப்பெற்றது.
விழாவிற்கு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் தலைமை தாங்கினார். தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஹரிஹரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை -1) விஜயகுமார் கலந்து கொண்டார்.
மாணவர்களுக்கு புரஜெக்டர் மூலம் சாலை விபத்து எற்படும் விதம் குறித்த வீடியோ, சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும், விபத்தில்லா பயணத்தை விழிப்புடன் செயல்படுத்துதல், வாகனத்தை ஓட்டும்போது கைபேசி உபயோகிக்க கூடாது மற்றும் பயணிகளின் படிக்கட்டு பயணத்தை எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட அறிவுரைகளை மாணவர்களிடம் கூறி பெற்றோர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
மேலும் சாலையில் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம், மிதிவண்டியின் பயணத்தின் போது கையால் எப்படி சிக்னல் செய்தல், தலைக்கவசம், சாலையில் உள்ள உத்திரவு பலகை, எச்சரிக்கை பலகை, அறிவிப்பு பலகை என அவற்றின் முக்கியத்துவத்தை விளக்கியும் அதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இதில், பள்ளி ஆசிரியர்கள் வினோதினி, வரலட்சுமி ரேவதி, ரேணுகா, கவியழகி மற்றும் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : நிருபர்.முகம்மது பிலால்
மீடியா செய்தி
No comments:
Post a Comment