இன்ஜி., மாணவர்களுக்கு புதிய, ‘ஆப்’ பணிக்கு தயார்படுத்தும், ‘இன்போசிஸ்
‘இன்போசிஸ்’ நிறுவனம், பொறியியல் மாணவர்களின், கல்வி மற்றும் தொழில் திறனை மேம்படுத்த, புதிய, ‘ஆப்’ வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொறியியல் கல்வியில், மூன்று மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு, ‘InfyTQ’ என்ற மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை இலவசமாக, கணினி, லேப்டாப், மொபைல் போனில் பதிவிறக்கி கொள்ளலாம்.இதன் மூலம், மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம். அத்துடன், எந்த துறையில் விருப்பம் உள்ளதோ, அதில் மேம்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளவும், மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் பயிற்சி பெறவும், வசதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், பட்டப் படிப்பை முடித்ததும், அந்தந்த தொழில்களுக்கு ஏற்ற திறனுடன், உடனடியாக பணியில் சேருவதற்கான தகுதியை மாணவர்கள் பெறுவர்.பாடத் திட்டங்களில் மாணவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப, திறன் மதிப்பீடு செய்யப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும். புதிய கண்டுபிடிப்புகள், செயல் திட்டங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கவும், ஆப் உதவும்.இன்போசிஸ் நிறுவனத்தின் கலாசாரம், மதிப்பு ஆகிவற்றை புரிந்து, அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை மாணவர்கள் பெறுவர்.
இந்த திட்டம், போட்டி நிறைந்த தொழில் உலகில், மாணவர்களின் ஆற்றலை வளர்த்து, அவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment