கல்வி தொலைக்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏன்? [ கல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சேனலாக செயல்படும் ] - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 27, 2019

கல்வி தொலைக்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏன்? [ கல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சேனலாக செயல்படும் ]

கல்வி தொலைக்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏன்?
[ கல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சேனலாக செயல்படும் ]

நிதி ஒதுக்கீடு இழுபறி காரணமாக படப்பிடிப்பு தளம் அமைக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் கல்வி தொலைக்காட்சி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வித்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லவும், பொதுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கபள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குநர் சுடலை கண்ணன் மற்றும் இணை இயக்குநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கல்வித் தொலைக்காட்சி தொடங்குவதற்கான முன்தயாரிப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதமேமுடிந்துவிட்டது. கடந்த ஜனவரி 21-ம் தேதி முதல் சேனலை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நிதி ஒதுக்கீடு இழுபறி காரணமாக தொலைக்காட்சியை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவில் கேரளா உட்பட சில மாநிலங்களில் மட்டுமே கல்விக்கெனதொலைக்காட்சி சேனல் உள்ளது. அதேபோல், தமிழக மாணவர்களுக்காக பிரத்யேக கல்வி சேனல் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. தனியார் தொலைக்காட்சி சேனல்களுடன் போட்டி போடும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிப்புக்கான முன்னேற்பாடுகள் முடிந்துவிட்டன. புதிய திட்டங்கள்மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்கள் வரை பயன்படும் வகையில் அரசின் புதிய திட்டங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத்தேர்வு குறித்தவிளக்கங்கள், புதிய முறையில்கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெறும். இதன் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள முடியும்.கல்வித் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பு மற்றும் தொழில் நுட்பதளம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8-ம் தளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி செயல்பாடுகளை பதிவுசெய்வதற்காக வழக்கமான கேமராக்களுடன், ஆளில்லா பறக்கும் கண்காணிப்பு கேமரா (ட்ரோன்) உட்பட நவீனதொழில்நுட்ப கருவிகள் வாங்குவதற்கு முதல்கட்டமாக அரசுசார்பில் ரூ.1.35 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்பின் நிதி ஒதுக்கீட்டில் இழுபறி காரணமாக படப்பிடிப்பு தளம் அமைத்தல் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் பணிகள் சுணக்கமடைந்துள்ளன.

எதிர்பார்த்தபடி பணிகள் முடியாததால் கடந்த ஜனவரி 21-ம் தேதி சேனல் ஒளிபரப்பு தொடங்கப்படவில்லை. இதற்கிடையே 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. நிதி ஒதுக்கீடுதொடர்ந்து நீட் தேர்வுக்காக பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புபயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தசூழலில் கல்வி சேனலைவிரைந்து தொடங்கினால் மட்டுமே மாணவர்கள் பயன்பெறுவர். எனவே, தமிழக அரசு முறையாக நிதிஒதுக்கி கல்வி சேனல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், கல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சேனலாக செயல்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment