பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் தேர்வு நேர மாற்றத்தினை நினைவூட்ட பள்ளிகளுக்கு அறிவுரை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை
மற்றும் தேர்வு நேர மாற்றத்தினை அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் நினைவூட்டும் படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணி வரை நடைபெறும் என மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது. ஏனைய பாடங்களான கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் மற்று விருப்ப மொழிப்பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, 12.45 மணி வரை நடைபெறும் என்பதையும் நினைவு கூர்ந்துள்ளது.
எனவே, தேர்வு நேர மாற்றத்தை மாணவர்கள் மனதில் பதியும் வண்ணம் இறைவணக்க கூட்டத்தில் அறிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்விவரத்தினை தலைமை ஆசிரியர்கள் அவர்களது பள்ளியில் உள்ள தகவல் பலகையில், மாணவர்கள் பார்வையில் படும் வண்ணம் ஒட்டிவைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment