அரசுப்பள்ளி மேன்மை பெற மக்களவைத் தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின் ஐந்து கோரிக்கை: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 27, 2019

அரசுப்பள்ளி மேன்மை பெற மக்களவைத் தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின் ஐந்து கோரிக்கை:

அரசுப்பள்ளி மேன்மை பெற மக்களவைத் தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின் ஐந்து கோரிக்கை:
அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை  அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்தின் கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக வெளியிட..
***
அ.அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே  ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும். .
**
*"சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும்  நடைமுறைபடுத்த வேண்டும்"
ஆ, சமச்சீர் கல்வியில் 2011ம் ஆண்டு(6 முதல் 10ம் வகுப்பு வரை)கொண்டுவரப்பட்ட கணினி பாட புத்தகம் பல கோடி செலவில்  அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு  பயன்படாத வண்ணம் இன்று வரை முடக்கப்பட்டுள்ளதை  நடைமுறை படுத்த வேண்டும்.
**
*"கணினியும்,ஆய்வகமும்  இல்லாத தமிழக அரசுப்பள்ளிகள்:"
இ.அனைத்து பள்ளிகளிலும் 50கணினிகளுடன்  கணினி ஆய்வகங்களை உருவாக்கிட வேண்டும்.(இலவச மடிக்கணினி கொடுப்பதை காட்டிலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில்  கல்வியாக வழங்கிட)
**
*"அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும்".
ஈ).கணினி பாடத்திற்கு மூன்று புத்தகங்கள் வழங்கிய  அரசு 2011லிருந்து  இன்று வரை தரம்  உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில்  கணினி பாடப்பிரிவு உருவாக்கித்தரவேண்டும். 
**
*"பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்".
 உ).கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்) பள்ளிகளுக்கு(11-12 குறைந்தது பட்சம் ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.
**
*"மத்திய அரசின் நிதி வீண்"
(NCERT விதியின் படி முதல் வகுப்பிலிருந்து கணினி பாத்தை தனிப்பாடமாக கொண்டுவர ஆய்வகம் அமைக்க  2011-2012கல்வியாண்டில் வழங்கப்பட்ட நிதி மாநிலத்தை ஆளும் அரசு இன்று வரை பயனபடுத்தவில்லை"
ஊ).மத்திய அரசு (ICT)அரசுப்பளளி ஏழை மாணவர்களின் கணினி கல்விக்காக வழங்கப்பட்ட  ரூ900 கோடியை நிதியை மாற்ற மாநிலங்கள் போல் முறையாக பயன்படுத்தி கணினி பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.
**
 "கணினி  அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் வாழும் கோடிக்காணக்கான  கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள்  பயன்பெறுவார்கள்".    
****&&****
 திருமதி ஜமுனாராணி,
மாநிலச் செய்தித் தொடர்பாளர்,
8675959594,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.


No comments:

Post a Comment