பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை, உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு
லோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம்ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல்கமிஷன் விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்தல், தமிழகத்தில், ஏப்ரலில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கானமுன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான பணிகளில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பட்டியல்பொது தேர்தலின் போது, ஓட்டுபதிவுக்கான பணிகள், ஓட்டு எண்ணிக்கை போன்றவற்றில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக, மாவட்ட வாரியாக பெயர், பதவி விபரங்கள் அடங்கியபட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஆசிரியர்களை பணிஅமர்த்துவதற்கு, அ.தி.மு.க., தரப்பில், எதிர்ப்பு
எழுந்துள்ளது. ஆசிரியர் சங்கங்களின் சில நிர்வாகிகளும், ஆசிரியர்களும், தேர்தல் பணியில் இருந்து விலக்கு கேட்டு, தேர்தல்கமிஷனுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இந்த விஷயத்தில், தேர்தல்கமிஷன், எந்த முடிவும் எடுக்கவில்லை.தரவில்லைஇந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்களின் விபரங்களுடன், விண்ணப்பம் பெற, பள்ளி கல்விதுறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. ஒரு வாரமாக, மாவட்டவாரியாக, பள்ளிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், தேர்தல் பணிக்குவிண்ணப்பம் அளிக்கவில்லை.இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறைஅதிகாரிகளிடம், தேர்தல் கமிஷன் தரப்பில், புகார்தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டங்களிலும், தேர்தல்பணிக்கு விண்ணப்பிக்காத, அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் பட்டியலை, பள்ளிகல்வித்துறை தயாரித்துள்ளது.அவர்களிடம், தேர்தல் பணியைபுறக்கணிப்பது ஏன் என்பதற்கு, உரிய பதில் அளிக்குமாறு விளக்கம்கேட்டு, அவசர நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. மாவட்டகல்வி அலுவலகம் வழியாக, முதற்கட்டமாக, 10 ஆயிரம் பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.இது குறித்து, பள்ளி கல்விஅதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடவேண்டியது அவர்களின் கடமை. கடமையை செய்யாமல், 'டிமிக்கி' கொடுத்தால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.பதவி உயர்வுகள் நிறுத்தம்பொது தேர்வு மற்றும் பொதுதேர்தல் காரணமாக, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு
நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பள்ளிகல்வியில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச்சில் பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வு, நாளை மறுநாள் துவங்க உள்ளது. தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்படஉள்ள ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, நாடு முழுவதும், லோக்சபா தேர்தலும் நடக்கஉள்ளது.இந்நிலையில், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுமற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு போன்ற நடவடிக்கைகளை, உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாவட்ட, மாநிலஅளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள, பதவி உயர்வுக்கான பட்டியல்கள்நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் முடிந்த பின், பதவி உயர்வு நடவடிக்கைகளை துவக்க, பள்ளி கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment