உறுப்பு கல்லூரிகளை அரசு ஏற்பதில் மாற்றம்; நிதி தட்டுப்பாட்டால் 14க்கு மட்டும் அனுமதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 4, 2019

உறுப்பு கல்லூரிகளை அரசு ஏற்பதில் மாற்றம்; நிதி தட்டுப்பாட்டால் 14க்கு மட்டும் அனுமதி

உறுப்பு கல்லூரிகளை அரசு ஏற்பதில் மாற்றம்; நிதி தட்டுப்பாட்டால் 14க்கு மட்டும் அனுமதி
சென்னை : தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, பல்கலைகளின் நிர்வாக பணிகளுக்கு, பல்கலை வருவாய் மற்றும், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் மானியம் பயன்படுத்தப்படுகிறது.


அத்துடன், அரசும் நிதியுதவி அளிக்கிறது. பல்கலைகளின் கீழ், உறுப்பு கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றுக்கு நிதி தட்டுப்பாடு இருப்பதால், உறுப்பு கல்லுாரிகளை, மாநில அரசே ஏற்க முடிவு செய்தது.இதன்படி, 'தமிழக பல்கலைகள் நடத்தும், 41 உறுப்பு கல்லுாரிகளின் செலவை அரசே ஏற்கும். இதற்கு, ஆண்டுக்கு, 152 கோடி ரூபாய் செலவாகும்' என, 2018 ஜூனில், சட்டசபையில், முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.

இதையடுத்து, 41 உறுப்பு கல்லுாரிகளின் பட்டியலை, பரிசீலித்த உயர்கல்வித்துறை, தற்போது, அரசிடம் நிதி பற்றாக்குறை இருப்பதால், உடனடியாக அனைத்து உறுப்பு கல்லுாரிகளையும், அரசு கல்லுாரிகளாக மாற்ற முடியாது என, தெரிவித்துள்ளது.முதல் கட்டமாக, 14 கல்லுாரிகளை மட்டும், அரசு கல்லுாரிகளாக மாற்றலாம் என்றும், மற்ற உறுப்பு கல்லுாரிகளை, மூன்று ஆண்டுகளில் படிப்படியாக மாற்றலாம் என்றும், உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், பல்கலைகளுக்கு மீண்டும் நிதி சுமை ஏற்பட்டுள்ளது.

எந்தெந்த கல்லுாரிகள்?
அரசு கல்லுாரிகளாக, 14 உறுப்பு கல்லுாரிகள் மாற்றப்பட்டுள்ளன. தெரசா பல்கலையின் கொடைக்கானல் பெண்கள் கல்லுாரி; மதுரை காமராஜர் பல்கலையின், ஆண்டிபட்டி, கோட்டூர் கல்லுாரிகள்; மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின், சாத்தான்குளம் கல்லுாரி; பாரதியார் பல்கலையின் கூடலுார், வால்பாறை உறுப்பு கல்லுாரிகள்.மேலும், பாரதிதாசன் பல்கலையின் பெரம்பலுார், ஒரத்தநாடு, அறந்தாங்கி மற்றும் லால்குடி கல்லுாரிகள்; பெரியார் பல்கலையின் மேட்டூர், பென்னாகரம் கல்லுாரிகள், திருவள்ளுவர் பல்கலையின், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் தென்னாங்கூர் கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளாக மாறியுள்ளன.

No comments:

Post a Comment