உயர்கல்வி நிறுவனங்களில் பணியில் சேரும் ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த முதலாமாண்டுக்குள் ஒரு மாத கால உண்டு, உறைவிட பயிற்சியை மேற்கொள்வதற்கான புதிய திட்டத்தை, பல்கலை மானியக்குழு வெளியிட்டுள்ளது.இதன்படி, பணியில் சேரும் ஒவ்வொரு ஆசிரியரும், 18 மற்றும் 12 நாட்கள் என இரண்டு கட்டங்களாக, ஒரு மாத பயிற்சி மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.
புதிய ஆசிரியர்கள் அவர்களது, கடமைகள், உயர்கல்வித்துறை செயல்பாடுகள், வகுப்பறை மேலாண்மை, தொழில்நுட்ப செயல்பாடுகள் என மாணவர்களுக்கான பாடத்திட்டம், பயிற்சிக்கான பாடத்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள், பல்கலை மானியக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment