அரசுப்பொருட்காட்சியில் அரசுத்துறைகளின் சார்பில் 26 அரங்குகளில் கல்வித்துறையின் சார்பில் தகவல் தொழில் நுட்பம் மூலம் கற்பிக்கும் ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 28, 2019

அரசுப்பொருட்காட்சியில் அரசுத்துறைகளின் சார்பில் 26 அரங்குகளில் கல்வித்துறையின் சார்பில் தகவல் தொழில் நுட்பம் மூலம் கற்பிக்கும் ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம்


காஞ்சி மாவட்டத்தில் வரும் ஜீலை ஒன்று முதல் ஆகஸ்ட் 17 வரை நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க அத்திவரதர் எழுந்தருளும் நிகழ்வில் காஞ்சி மாவட்டத்தின் சார்பில் நடைபெற இருக்கும் அரசுப்பொருட்காட்சியில் அரசுத்துறைகளின் சார்பில் 26 துறைகள் பங்கு பெறுகின்றன. 



அதில் கல்வித்துறையின் சார்பில் வைக்க இருக்கும் அரங்கில் தகவல் தொழில் நுட்பம் மூலம் கற்றல் கற்பித்தலில் எங்கள் பள்ளியில் செய்யும் செயல்பாடுகள் யாவும் கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க 


இருக்கின்றோம். இத்தகைய.சிறப்பான ஒரு நிகழ்வில் எங்கள் பள்ளிக்கு வாய்ப்பளித்த கல்வித்துறைக்கு எங்களின் நன்றிகள். வாய்ப்புகள் கிடைக்காவிடிலும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுபவர்கள் என்றும் பின்வாங்குவதில்லை. அதுபோல எந்தவித வசதிகள் இல்லாவிடிலும் எங்களால் முயன்றவரை உடல் உழைப்பினையும் பணச்செலவையும் பொருட்படுத்தாமல் எங்களால் என்ன முடியுமோ
 அதை செய்துகொண்டிருக்கிறோம். தொடர்ந்தும் செய்வோம். அத்திவரதரை காண வரும் அனைவரும் பொருட்காட்சிக்கு வரும்போது கல்வித்துறையில் அரசு பள்ளிகளில் என்னென்ன செயல்பாடுகள்மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது 

 நன்றி - செல்வகுமார் ஞா இ.நி.ஆசிரியர் 


No comments:

Post a Comment