பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் குறித்த கல்வி அளிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 12, 2019

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் குறித்த கல்வி அளிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் குறித்த கல்வி அளிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசியஅமைச்சர் செங்கோட்டையன், "தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் திட்டத்தைநாளை மறுநாள் முதல்வர் துவக்கி வைக்கிறார்.பள்ளி மாணவர்கள், புதிய பஸ் பாஸ் பெறும் வரைபழைய பஸ் பாஸ்களையே பயன்படுத்தலாம்.கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2 லட்சம் அதிகரித்துள்ளது. அதாவது 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.இதன்மூலம் வருங்காலத்தில் தமிழகத்தில் கல்வியறிவு விகிதம் அதிகரிக்கும்.

பொறியியல் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு வேலைவாய்ப்பின்மையை காரணம். அதனை சரிசெய்யஉயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்.எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் ஆசிரியர்கள் நியமனம் மாணவர் சேர்க்கை அடிப்படையில் நடைபெறும்" என்று கூறினார்.இறுதியாக பல்வேறு அரசு பள்ளிகளில் புதிய பாடப் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு,"எந்தெந்த பள்ளிகளில் வழங்கப்படவில்லை என்பதை தெரியப்படுத்துங்கள். அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த பள்ளி மாணவர்களின் கையில் புத்தகம் இருக்கும்" என்று செங்கோட்டையன் பதிலளித்தார்.

No comments:

Post a Comment