புதிய பள்ளிப் பாட புத்தகங்கள்.. ஏகப்பட்ட பிழைகளால் சர்ச்சை..! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 15, 2019

புதிய பள்ளிப் பாட புத்தகங்கள்.. ஏகப்பட்ட பிழைகளால் சர்ச்சை..!

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய பள்ளிப் பாட புத்தக்கத்தில் பிழைகள் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் புதிய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வந்தது. இந்தப் புத்தகங்கள் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்தப் புத்தகங்களில் நிறையே எழுத்து பிழைகள் மற்றும் வரலாற்று பிழைகள் இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
உதாரணமாக ஒரு சில புத்தகங்களில் வாக்கிய பிழைகள் மற்றும் எழுத்து பிழைகள் உள்ளன
அதிலும் குறிப்பாக ஆங்கில புத்தகத்தில் ஆங்கிலத்தின் தரம் மிகவும் குறைந்திருப்பதாக ஆங்கில ஆசிரியர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தக்கத்தின் பக்கம் எண் 166ல், '1857 புரட்சியின் போது இஸ்லாமிய தலைவர்கள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முற்பட்டனர்' என்று எந்தவித ஆதாரமும் இன்றி வரலாறு தவறாக கொடுக்கப்பட்டுள்ளது என புகார் எழுந்துள்ளது.

மேலும் 8ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் கிராஃபைட் மின்சாரத்தை கடத்தும் என்று சரியாக அச்சடிக்கப்பட்டுள்ளது.
எனினும் 9ஆம் வகுப்பு தமிழ் வழி அறிவியல் புத்தக்கத்தின் 178-வது பக்கத்தில் கிராஃபைட் மின்சாரத்தை கடத்தாது என்று தவறாக கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 7ஆம் வகுப்பின் சமூக அறிவியல் புத்தகத்தின் 210வது பக்கத்தில் 'ஹிந்தி இந்தியாவின் ஆட்சி மொழி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆட்சி மொழியாக உள்ளன. இந்தப் புத்தகத்தில் ஆங்கில மொழியை பற்றி குறிப்பிடவில்லை. இந்தப் புத்தகத்தில் உள்ள தவறுகள் குறித்து பல ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்தப் புத்தகங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன

No comments:

Post a Comment