தனியார் பள்ளியை மிஞ்சிய அரசு பள்ளி... வகுப்பறையில் 'ஏசி' மாணவர்கள் 'குஷி' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 18, 2019

தனியார் பள்ளியை மிஞ்சிய அரசு பள்ளி... வகுப்பறையில் 'ஏசி' மாணவர்கள் 'குஷி'

தனியார் பள்ளியை மிஞ்சிய அரசு பள்ளி... வகுப்பறையில் 'ஏசி' மாணவர்கள் 'குஷி'

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், தொண்டி அரசு பள்ளி வகுப்பறையில் ஏசி பொருத்தி மாணவர்களை குஷிப்படுத்தியுள்ளனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பெற்ேறார் பாராட்டு தெரிவித்துள்ளனர். அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அதிகமான பள்ளிகளை அரசு மூடி விட்டது. தனியார் பள்ளிகளுடன் போட்டி போட முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இருப்பினும், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளை தனித்துவமாக காட்ட பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று தொண்டி கிழக்கு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 4 மற்றும் 5ம் வகுப்பு அறைகளுக்கு குளிரூட்டப்பட்ட வசதி திறப்பு விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமை வகித்தார். இனி வரும் காலங்களில் அனைத்து வகுப்பறையிலும் குளிர்சாதன வசதி செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment