மாணவர்கள் தண்ணீர் சேமிப்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 25, 2019

மாணவர்கள் தண்ணீர் சேமிப்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்

மாணவர்கள் தண்ணீர் சேமிப்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்
ஒவ்வொரு மாணவரும் வீடு மற்றும் பள்ளிகளில் தினமும் ஒரு லிட்டர் தண்ணீரை சேமிப்பதை உறுதி செய்யுமாறு பள்ளிகளுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவுறுத்தியுள்ளது. 

ஜல் சக்தி அபியானில் பள்ளிகள், மாணவர்களை பங்கேற்கச் செய்யும் வகையில், சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்கவும், ஏற்கெனவே இருக்கும் மன்றங்களை வலுப்படுத்தவும் வேண்டும் என்றும் பள்ளிகளை சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கால நிலை குறித்த கல்வி அறிவை ஊக்குவிப்பதோடு, தண்ணீரைச் சேமிப்பதற்கான நடவடிக்கைகளில் தொடக்க நிலை முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

இது குறித்து சிபிஎஸ்இ தலைவர் அனிதா கார்வால் கூறுகையில், தண்ணீரைச் சேமிப்பது தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் இந்தக் கல்வியாண்டில் ஒரு நிகழ்ச்சி நிரலை பின்பற்ற வேண்டும். இது 5 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பயிலும் ஒவ்வொரு குழந்தையும் வீட்டிலும், பள்ளியிலும் ஒவ்வொரு நாளும் ஒரு லிட்டர் தண்ணீரைச் சேமிப்பது உறுதி செய்யப்படும். இதன் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்துப் பள்ளிகளும் தண்ணீர் தன்னிறைவு பெற்றதாக இருக்கும் என்றார்


No comments:

Post a Comment