உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு
உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச்சாவடி அலவலர்களாகப் பணிபுரிய, ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி, பள்ளிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், 2016ல் இருந்து நடத்தப்படாமல் உள்ளது. வார்டு மறுவரையறை செய்வதில், தாமதம் ஏற்பட்டதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில், வழக்கு நிலுவையில் உள்ளது.விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்துவதற்கான, முன்னேற்பாடு பணிகள், கீழ் நிலைகளில் நடந்து வருகின்றன.
'ஓட்டுச்சாவடி அலுவலர்களை நியமிப்பதற்காக, ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்ய, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் விபரங்களை, அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யுங்கள். அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், அவற்றை ஒப்படைக்க வேண்டும். அதில், கடந்த தேர்தல்களில், அவர்கள் பணி செய்த அனுபவம் உள்ளதா என்பதையும், அவர்களின் போன் எண், முகவரி உள்ளிட்ட விபரங்களையும், இணைத்து அனுப்ப வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment