தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கு ஆகஸ்டு 2-ந்தேதி கலந்தாய்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 5, 2023

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கு ஆகஸ்டு 2-ந்தேதி கலந்தாய்வு

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கு ஆகஸ்டு 2-ந்தேதி கலந்தாய்வு 
 
        தமிழகத்தில் 2023-24-ம் கல்வி ஆண்டில் பி.இ., பி.டெக், பி.ஆர்க் போன்ற என்ஜினீயிரிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி என்ஜினீயரிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியது. 
 
        பிளஸ்-2 முடித்துள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதி விறக்கம் செய்து அதை நிரப்பி விண்ணப்பிக்க தொடங்கினார்கள். www.tneaonline.org மற்றும் www.tndte.gov.in ஆகிய இணைய தளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையத்திலும் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 8-ந்தேதி வெளியாகும் நிலையில் ஜூன் 6-ந்தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
        ஜூன் 7-ந்தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. ஜூன் 12-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும். ஜூலை 12-ந்தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் ஏதாவது குறைகள் இருந்தால் ஜூலை 13-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அணுகி சரி செய்து கொள்ளலாம். 
 
        இதையடுத்து என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 2-ந்தேதி தொடங்குகிறது. அன்று முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பங்கேற்பார்கள். அதன் பிறகு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 7-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment