நாடு முழுவதும் 2004ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு திட்டம் (NPS) அமல்படுத்தப்பட்டது. இதில் நிலையான ஓய்வூதியம் கிடைக்காததால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்று அரசு ஊழியர்கள் சார்பில் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு, இதுவரை NPS திட்டத்தில் டெபாசிட் செய்த தொகை கிடைக்காது என மத்திய அரசு அறிவித்தது.
இருந்தாலும் அரசு ஊழியர்களின் நலன் கருதி பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) அமல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் சத்தீஸ்கர் மாநில அரசு மத்திய அரசிடம், NPS கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.17,000 கோடியை OPS திட்டத்தில் டெபாசிட் செய்ய கோரிக்கை வைத்தது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததால் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
அதாவது 2005ம் ஆண்டு அரசு பணியில் சேர்ந்து 2020ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் ஓய்வூதியமாக ரூ.2,200 மட்டுமே பெறுவதாக கவலை தெரிவித்து வருகிறார்.
இதன் காரணமாகவோ என்னவோ? தமிழகத்தில் தி.மு.க.தேர்தலில் வாக்குறுதி அளித்தும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தயக்கம் காட்டி வருகிறது.
No comments:
Post a Comment