முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இந்த திட்டத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்ப்பட்டாலோ பாதிப்பு ஏற்ப்பட்டாலோ அவை அனைத்திற்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 20, 2023

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இந்த திட்டத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்ப்பட்டாலோ பாதிப்பு ஏற்ப்பட்டாலோ அவை அனைத்திற்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பு

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 
 
இந்த திட்டத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்ப்பட்டாலோ பாதிப்பு ஏற்ப்பட்டாலோ அவை அனைத்திற்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்.
 
         எனவே மிகவும் கவனமாக கையாளவேண்டும்.குழுவை தேர்ந்தெடுப்பதிலும் குழு உறுப்பினர்களில் ஊழியரை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் தேவை இந்த முதன்மைக்குழுதான் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பணிகளையும் முதன்மைக்குழுவை உருவாக்கி, அந்த முதன்மைக்குழுவே அனைத்தையும் மேற்ப்பார்வை இடும் 
 
        முதன்மைக்குழுவில் ஐந்துபேர் இருப்பர். 
1. தலைமை ஆசிரியர், 
2. ஊராட்சிமன்றத் தலைவர், 
3. SMC தலைவர், 
4. SMC யின் பிரதிநிதி(ஆசிரியப்பிரதிநிதி அல்லது குழு உறுப்பினர்களில் ஒருவர்) 5. ஊராட்சி அளவிலான அல்லது பகுதி அளவிலான அலுவலக பிரதிநிதி 
 
        இந்த ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதுதான் முதன்மைக்குழு இந்த முதன்மைக்குழுவின் ஒருங்கினைப்பாளராக தலைமை ஆசிரியர்தான் செயல்படுவார். விதிகளை பின்பற்றி தேர்ந்தெடுக்க வேண்டும். 
 
         தலைமை ஆசிரியருக்குத் தெரியாமல், ஊராட்சி மன்றத் தலைவர் தேர்ந்தெடுத்ததாகவோ,BDO ஆபீஸ் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதாகவோ தகவல் தெரியவந்தால் அதை ஏற்க மறுக்கலாம். அல்லது அவ்வாறு முறைகேடாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு தலைமை ஆசிரியரை ஒருங்கிணைப்பாளராக கொண்ட முதன்மைக்குழுவே தேர்ந்தெடுத்ததாக தீர்மானம் எழுதி கையெழுத்துப்போட நிர்ப்பந்திக்கப்படலாம்.
 
       அவ்வாறு இருப்பின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு விதிமுறைகளை பின்பற்றி நியமிக்கப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம்.எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவும். அரசியல்வாதிகளாலோ, தலைவராலோ, BDO அலுவலகம் மூலமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டாலும் அதற்கு தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு. ஏற்புடையது இல்லை என்று நீங்கள் கருதினால் நிராகரிக்கலாம். 
 
        ஒருவேலை அவர்கள் கையூட்டு அளித்து நியமனம் பெற்றிருந்தால் அவர்கள் பணியில் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. அதற்கும் முதன்மைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தலைமை ஆசிரியருக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது.
 
         முதலமைச்சரின் சீரிய திட்டத்தை சிறப்புடனும் கவனத்துடனும் மேற்கொள்ள வேண்டும்.
 
 
click here

No comments:

Post a Comment