இந்தியா முழுவதும் கடந்த மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவி வருகிறது. இதன் காரணமாக, மகாராஷ்டிரா, ஒடிசா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் வழக்கத்தை விட முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப் பட்டது.
இருப்பினும் இந்த கோடை விடுமுறைக் காலத்திலும், வழக்கம் போலவே பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களான தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் கல்வித்துறை சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
இந்த தேர்வு முடிவுகளால், மாணவர்கள் அனைவரும் அடுத்தகட்ட படிப்புக்களை தேர்வு செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு புறம் நடந்து வந்தாலும், கோடை வெயிலின் தாக்கம் நாள் தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள கோடை விடுமுறையானது நீடிக்கப்படுமா?? என்ற கேள்விகளும் அதிக அளவில் எழுந்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்தியாவில் அதிக வெப்பநிலை நிலவும் மாநிலங்களான உத்தரப்பிரதேசத்தில் ஜூன் 20ம் தேதி வரையும், ஒடிசாவில் ஜூன் 18ம் தேதி வரையும், மத்திய பிரதேசத்தில் ஜூன் 15ம் தேதி வரையும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு, 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் கோடை விடுமுறை முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment