தமிழகத்தில் பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, May 21, 2023

தமிழகத்தில் பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த படி இருப்பதால் பள்ளி திறக்கும் நாள் தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார். 

 பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நிறைவடைந்து வரும் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 1ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் ஐந்தாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பம் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் மாணவர்களுக்கான பள்ளி திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படுமா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படுவது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment