கண்களை பரிசோதிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 4, 2015

கண்களை பரிசோதிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் ஆறு முதல், 12ம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பார்வை திறன் குறித்து, கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், பரிசோதிக்க வேண்டும். அதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி தரப்படுகிறது.

பார்வை குறைபாட்டை கண்டுபிடிக்க உதவும் சார்ட், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அதை படிக்கச் சொல்லி, மாணவர்களின் பார்வை குறைபாட்டை கண்டறியலாம். அவர்களுக்கு, மருத்துவப் பரிசோதனை செய்து, குறைபாட்டுக்கேற்ப, கண்ணொளி காப்போம் திட்டம் மூலம், இலவச கண் கண்ணாடி வழங்கப்படும்,என்றார்.

No comments:

Post a Comment