குழந்தை நேயப் பள்ளிகள் அமைப்பும் கொள்கையும் பற்றிய பயிற்சி வகுப்புகள் - விருப்பம் உள்ள தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 26, 2015

குழந்தை நேயப் பள்ளிகள் அமைப்பும் கொள்கையும் பற்றிய பயிற்சி வகுப்புகள் - விருப்பம் உள்ள தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம்.

யுனிசெப் மற்றும் சமூகக் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய குழந்தை நேயப் பள்ளிகள் (CHILD FRIENDLY SCHOOLS) கொள்கைகள் மற்றும் அமைப்பு முறைகள் பற்றிய தமிழ் மொழியாக்க நூல் மதிப்பாய்வுக் கூட்டம் சென்னையில் அக் 17 மற்றும் அக்18 ஆகிய நாட்களில் நடைபெற்றது. முன்மாதிரியான குழந்தை நேயப்பள்ளிகளை வெற்றிகரமாக்கிய அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பலர் பகிர்ந்துகொண்ட கருத்துகள் மிகவும் பயனுடையதாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்தபோது கற்றுக் கொள்ள முடியாமல் போன கற்றல் கற்பித்தல் பற்றிய அறிவை 2 நாள் கூட்டத்தில் பெற முடிந்தது. குறிப்பாக நெடுவாசல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையன் அவர்களிடம் கற்றுக்கொண்ட அனுபவங்கள் மிகவும் பயனுடையவை. கருப்பையன் அவர்களைப் போல அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களும் செயல்பட்டால் மட்டுமே மாணவர் எண்ணிக்கைக் குறைவினால் கிராமப்புற அரசுப்பள்ளிகள் மூடப்படுவதைத் தவிர்க்க முடியும் என்று கருதுகிறேன். அடுத்த கட்டமாக தமிழகத்தில் ஆறு மண்டலங்களில் குழந்தை நேயப் பள்ளிகள் அமைப்பும் கொள்கையும் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. மாவட்டத்திற்கு 10 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். விருப்பம் உள்ள தலைமை ஆசிரியர்கள் சமூகக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் சியாம் சுந்தர் அவர்களைத் தொடர்புகொள்ளவும். அலைபேசி எண்: 9750966400

No comments:

Post a Comment