தமிழக நெடுஞ்சாலைத் துறையில் 188 இளநிலை வரை தொழில் அலுவலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 29, 2015

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் 188 இளநிலை வரை தொழில் அலுவலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் நிரப்பப்பட உள்ள இளநிலை வரை தொழில் அலுவலர் பதிவிக்கு தகுதியானவர்களிடமிருந்து பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 12390/Nir 5(1)2014  தேதி: 26.10.2015

பணி: இளநிலை வரை தொழில் அலுவலர்

காலியிடங்கள்: 188

சம்பளம்: மாதம் ரூ.9.300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnhighways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

இணை - இயக்குநர் (நிர்வாகம்),

முதன்மை இயக்குநர் அலுவலகம் (நெடுஞ்சாலைத்துறை)

பொதுப்பணித்துறை வளாகம், சேப்பாக்க், சென்னை - 600005.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnhighways.gov.in/pdf/Jdo%20Recruitmemt_Notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment