பிளஸ் 2 தனித் தேர்வு முடிவு: நவம்பர் 2-இல் வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 31, 2015

பிளஸ் 2 தனித் தேர்வு முடிவு: நவம்பர் 2-இல் வெளியீடு

பிளஸ் 2 தனித் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (நவம்பர் 2) வெளியிடப்பட உள்ளன. முடிவை தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பெறலாம்.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:- பிளஸ் 2 தனித் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகளை http://dge.tn.nic.in. என்ற இணையதளத்திலிருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே திங்கள்கிழமை (நவ.2) மாலை 4 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை தெரிவித்த வேண்டும்.
அசல் மதிப்பெண் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு நேரில் சென்று நவம்பர் 4 முதல் 6-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment