கல்லூரியில் புதிய பாடம் அரசிடம் வலியுறுத்த முடிவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 28, 2015

கல்லூரியில் புதிய பாடம் அரசிடம் வலியுறுத்த முடிவு

சிக்கண்ணா அரசு கல்லூரியில், புதிதாக பாடப்பிரிவுகள் சேர்க்க, தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்க, கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில், 14 பாடப்பிரிவுகளில், 2,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பனியன் தொழில் நகர மாக திருப்பூர் இருப்பதால், ஆடை வடிவமைப்பு, பேஷன் சார்ந்த படிப்புக்கு, பலரும்
(காஸ்ட்யூம் டிசைனிங் அண்டு பேஷன் - சி.டி.எப்.,) ஆர்வம் காட்டுகின்றனர்; ஆடிட்டிங் படிக்கவும் பலரிடடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா சார்ந்த படிப்பு படிக்கவும் விரும்புகின்றனர்.
இப்படிப்புகள் சிக்கண்ணா கல்லூரியில் இல்லாதது, மாணவர்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. இக்கல்லூரியில், பி.ஏ., தமிழ் இலக்கியம், பொருளியல், எம்.எஸ்.சி., சி.டி.எப்., டூரிஸம் அண்டு மேனேஜ்மென்ட், எம்.காம்., சி.ஏ., எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, எம்.ஏ., இலக்கியம் உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளுக்கு, அரசிடம் கோரிக்கை வைக்க, கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment