தனித்தேர்வர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு டிச.11 முதல் விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 10, 2015

தனித்தேர்வர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு டிச.11 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகின்ற 2016 மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்க உள்ள 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிச.11 முதல் டிச.24 வரை விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடி தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி 1ல் மொழிப்பாடத்தில் தமிழ்மொழி பாடத்தை மட்டுமே முதற்பாடமாக எடுத்து தேர்வெழுதுதல் வேண்டும். எஸ்எஸ்எல்சி பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள், தோல்வியடைந்த பாடத்தை மட்டும் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வெழுதலாம். சேவை மைய விபரங்கள் மற்றும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை www.tndge.inஎன்ற இணையதளம், மாவட்ட சிஇஓ அலுவலகம், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் கூடுதலாக ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பின் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதால்இச்சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் மாவட்டத்திலேயே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment