தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை பதம் பார்த்த வடகிழக்கு பருவமழை சற்று தணிந்துள்ளதால், சுமார் ஒரு மாதகாலமாக பள்ளி-கல்லூரிகள் இயங்கவில்லை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூ உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.
எனினும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 9-ம்தேதி வரை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணி பல்வேறு பகுதிகளில் நிறைவடையாததாலும், இன்று காலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதாலும், பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னையில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment