சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால், நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை (டிச.14) திறக்கப்பட உள்ளன.
தீபாவளிப் பண்டிகை, தொடர் மழை காரணமாக கடந்த நவம்பர் 6-ஆம் தேதிக்குப் பிறகு பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை விடப்பட்டது. இடையில் 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டன. வடகிழக்குப் பருவ மழையின் தீவிரத்தால் சென்னை, அதன் சுற்றுப்புறங்களில் மழை, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடப்பட்ட விடுமுறை டிசம்பர் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை (டிச.14) முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் வகையில் தூய்மைப்படுத்தும் பணிகள், ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாவட்டத்தில் 29 பள்ளிகளைத் தவிர மீதமுள்ள பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்தார்.
மழை, வெள்ளம் காரணமாக சென்னை, அதன் சுற்றுப்புறங்களில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான புத்தகங்கள் வழங்கப்பட உள்ள நிலையில், சீருடைகள் விதிகள் தளர்த்தப்படுமா என மாணவர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விடுமுறை விடப்படும் 29 பள்ளிகள் விவரம்: சென்னையில் 29 பள்ளிகளைத் தவிர மீதமுள்ள பள்ளிகள், கல்லூரிகள் திங்கள்கிழமை வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இந்த 29 பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளின் விவரம்:-
அரசுப் பள்ளிகள்: அரசு மேல்நிலைப் பள்ளி, சிட்கோநகர், வில்லிவாக்கம், சென்னை.
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.
அரசு உதவிப்பெறும் பள்ளிகள்:
ஒய்.எம்.சி.ஏ. காலேஜ் ஸ்போர்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, நந்தனம், சென்னை.
அரசு உதவிப்பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகள்: அம்பத்தூர் அரிமா சங்கம் நடுநிலைப் பள்ளி, இராஜாமன்னார் சாலை, சாலிகிராமம், சென்னை லயன்ஸ் கிளப் தொடக்கப் பள்ளி, கிண்டி, சென்னை.
திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.
புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளி, ஆயிரம் விளக்கு, சென்னை.
சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி, ஆயிரம் விளக்கு, சென்னை.
சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளி, சைதப்பேட்டை, சென்னை.
புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளி, சின்னமலை, சென்னை.
சென்னை பள்ளிகள்: சென்னை தொடக்கப் பள்ளி, அம்மையம்மாள் தெரு, புளியந்தோப்பு , சென்னை.
சென்னை உயர்நிலைப் பள்ளி, அம்மையம்மாள் தெரு, புளியந்தோப்பு , சென்னை.
சென்னை நடுநிலைப் பள்ளி, மாடல் பள்ளி, ஆயிரம் விளக்கு, சென்னை.
சென்னை உயர்நிலைப் பள்ளி, 10, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, பஜார் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, 10, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை.
சென்னை மேல்நிலைப் பள்ளி, சி.ஐ.டி. நகர், நந்தனம், சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, சி.ஐ.டி. நகர், நந்தனம், சென்னை.
சென்னை உருது தொடக்கப்பள்ளி, பஜார் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை.
சென்னை நடுநிலைப் பள்ளி, திடீர் நகர், சைதாப்பேட்டை, சென்னை.
சென்னை மேல்நிலைப் பள்ளி, புலியூர், வடபழனி, சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, புலியூர், வடபழனி, சென்னை.
சென்னை மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை.
சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, காமராஜர் நிழற்சாலை, அடையாறு, சென்னை.
சென்னை உயர்நிலைப் பள்ளி, காமராஜர் நிழற்சாலை, அடையாறு, சென்னை.
சென்னை மேல்நிலைப் பள்ளி, தரமணி, சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.
Monday, December 14, 2015
New
மழை - வெள்ளத்தால் நீண்ட விடுமுறை: சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment