அந்தமான் அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேலும் 4 நாட்கள் மழை நீடிக்கும்; கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 1, 2015

அந்தமான் அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேலும் 4 நாட்கள் மழை நீடிக்கும்; கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.தமிழகம் முழுவதும் மழை

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து உருவாகியதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் நேற்று மழை பெய்தது.மேலும் நீடிக்கும்

இந்தநிலையில் வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–கடலோர மாவட்டங்களில் மிக கனமழை

இலங்கை அருகே இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்துவிட்டது. வங்க கடலில் அந்தமான் அருகே தென் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ளது. இது மெதுவாகத்தான் நகரும்.

இந்த நிகழ்வு காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குடவாசலில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.

கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யும். உள்மாவட்டங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். சில நேரங்களில் கனமழை பெய்யும்.சென்னையில் 8–ந் தேதி வரை மழை

மொத்தத்தில் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தையும் சேர்த்தால் 5 நாட்களுக்கு மழை உண்டு. அடுத்த 24 மணி நேரம் என்பது நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையாகும். சென்னையில் 8–ந் தேதி வரை மழை உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 44 செ.மீ., ஆனால் இதுவரையில் பெய்த மழை அளவு 52 செ.மீ. அதாவது வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31–ந் தேதி வரை உள்ளது.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment