தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, தொடர்ந்து பெய்து வருகின்றது இன்னும் நான்கு நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
கனமழை காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
கனமழை காரணமாக சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று(01-1-2-15) நடைபெறவிருந்த தேர்வு, வரும் 16ம் தேதிக்கு(16-12-15) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை மற்றும் திருவள்ளூர் பல்கலையில் இன்று(01-12-15) நடைபெறவிருந்த தேர்வு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் சட்டக் கல்லூரி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடக்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் வரும் ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment