அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 8, 2015

அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்:

பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக  பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால், 7.12.2015 அன்று முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்திட ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். சில தனியார் பள்ளிகள் இந்த உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என கருதுவதாக தெரிய வருகிறது.

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்ப பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment