சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–நேற்று குமரி கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று வலுவிழந்து விட்டதால் கன மழை பெய்ய வாய்ப்பு இல்லை.வரும் 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. சேத்தியாதோப்பு, பண்ருட்டி, அரூர், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும், செங்கல்பட்டு, சிதம்பரம், உத்திரமேரூர், பாபநாசம், மதுராந்தகம், திருக்கோவிலூர், குடவாசல், நெய்வேலி ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது. விழுப்புரம், செய்யார், காஞ்சிபுரம், வந்தவாசி, மரக்காணம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment