சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பலபகுதிகளின் பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்புகளிலிருந்தும் நிவாரண உதவிகள் குவிந்தவண்ணம் உள்ளன. இதனிடையே, தமிழகத்திற்கு கொண்டு செல்லும் நிவாரண பொருட்களை ரயிலில் இலவசமாக கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்து ஜோனல்களுக்கும் ரயில்வே பொதுமேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி வருகின்றனர். இங்கு தான் பாதிக்கப்பட்ட மக்களைவிட, அவர்களுக்கு உதவி செய்வோர் அதிகமாக இருப்பதை காண்கிறோம் என்று பலர் தெரிவித்துள்ளதை மெய்ப்பிக்கும் வகையில், சென்னை மற்றும் கடலூர் பகுதியில், பல்வேறு தரப்பினர் உணவு, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் என தங்களால் முடிந்தவைகளை லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.
மதுரை, கோவை என மாநிலத்தின் பலபகுதிகளிலிருந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் சென்றுகொண்டிருக்கும் நிலையில், நிவாரணப்பொருட்கள், ரயிலில் இலவசமாக கொண்டு செல்லப்படும் என்ற அறிவிப்பு, உதவுபவர்களை மேலும் ஊக்கமடைய செய்யும் நிகழ்வாக அமைந்துள்ளது
No comments:
Post a Comment