சென்னையில் வெள்ளத்தால் சேதமடைந்த அல்லது தொலைந்து போன பாஸ்போர்ட்டுகளுக்கு பதிலாக அரசு இலவசமாக புதிய பாஸ்போர்ட்டுகளை வழங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வரலாறு காணாத தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி மக்கள் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில், “வெள்ளத்தால் உங்களின் பாஸ்போர்ட் சேதம் அடைந்திருந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ சென்னையில் உள்ள 3 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களுக்கு தயவு செய்து செல்லுங்கள். அங்கு உங்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட் அளிக்கப்படும்.”என்று தெரிவித்துள்ளார்.
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சென்னை மக்களுக்கு சுஷ்மா ஸ்வராஜின் இந்த அறிவிப்பு ஆறுதலை அளித்துள்ளது.
No comments:
Post a Comment